55 வயதுக்கு மேற்பட்ட காவல்துறையினர்களுக்கு வீட்டில் இருந்தே பணி: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (19:29 IST)
55 வயதுக்கு மேல் உள்ள காவல் துறையினர் வீட்டிலிருந்தே பணி செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் காவல் நிலையம் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் தான் நாட்டிலேயே அதிக அளவில் கொரன வைரஸ் பாதிப்பு பரவி வருவதை அடுத்து அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் 55 முதல் 58 வயது வரை உள்ளவர்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்து கொள்ளலாம் என்றும் பொதுமக்களிடம் தொடர்பு இல்லாத, குறைவான தொடர்பு உள்ள இடங்களில் அவர்கள் பணியாற்றுவார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்