பொது இடத்தில் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை

Webdunia
வியாழன், 4 மே 2017 (21:20 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் பொது இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டத்தில் உள்ள மடோரா என்ற கிராமத்தில் முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நேற்று நடைப்பெற்ற கிராம பஞ்சாயத்தில் பெண்கள் பொது இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீறினால் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:-
 
இது அரசியலமைப்பு எதிரானது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களின் சுதந்திரத்துக்கு தடை விதிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க முடியாது, என்றார்.
 
திருமணம் ஆகாத பெண்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்வதற்கு செல்போன் உதவியாய் இருப்பதாக கருதி கிராம பஞ்சாயத்தில் இத்தகைய உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்