எக்ஸ்பிரஸ் ரயிலில் ரத்த வெள்ளத்தில் பெண் போலீஸ்.. பாலியல் வன்கொடுமையா?

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:23 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் ஒன்றிய பெண் போலீஸ் ரத்த வெள்ளத்தில் இருந்ததை அடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி ரயில் நிலையத்தில் சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 
 
அவரது ஆடைகள் களையப்பட்டுள்ளதால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா? என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் போலீஸ் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்