ஆயிரக்கணக்கான கிலோ இனிப்புகளை ஆர்டர் செய்த காங்கிரஸ்.. எந்த நம்பிக்கையில்?

Mahendran

திங்கள், 3 ஜூன் 2024 (18:35 IST)
நாளை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கும் நிலையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோ இனிப்புகளை காங்கிரஸ் கட்சி ஆர்டர் செய்து வைத்துள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 
 
ஆனால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் கட்சிகள் நாங்கள் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் இருந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு படி மேலே போய் ஆயிரக்கணக்கான கிலோ இனிப்புகளை ஆர்டர் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில் ‘மக்களவைத் தேர்தலில் 295 இடங்களில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அதற்காகத்தான் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரமாண்டமான பந்தல் போட்டு இருக்கிறோம் என்றும் பல்லாயிரக்கணக்கான இனிப்புகள் ஆர்டர் செய்துள்ளோம் என்றும் வெற்றி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் எந்த நம்பிக்கையில் காங்கிரஸ் இனிப்புகளை ஆர்டர் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பு வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்