சிறுமிக்கு பாலியல் தொல்லை: திரைப்பட இயக்குனர் போக்சோவில் கைது..!

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (13:49 IST)
சிறுமியை கதாநாயகி ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலையாள திரைப்பட இயக்குனர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
மலையாள திரை உலகில் இயக்குனராக இருப்பவர் ஜாஸிக் அலி.  இவருடைய திரைப்படம் ஒன்று கடந்த மே மாதம் வெளியானது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சிறுமியை கதாநாயகி ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. லாட்ஜ்களில் சிறுமியுடன் தங்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது 
 
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இயக்குனர் ஜாசிக் அலி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ  சட்டம் பாய்ந்து உள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்