ரூ.2 லட்சம் நிதி கொடுத்த முன்னாள் முதல்வர்: தூக்கி எறிந்த பெண்!

வெள்ளி, 15 ஜூலை 2022 (19:34 IST)
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்த நிலையில் அந்த பணத்தை அந்த பெண் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் பாதாமி என்ற தொகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி அளித்தார்
 
ஆனால் அந்த பணத்தை அவர் சித்தராமையா காரின் முன் தூக்கி எறிந்தார் பணத்தைவிட எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று கூறியபடி அவர் சித்தராமையா மீது பணத்தை தூக்கி வீசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்