கணவரை விவாகரத்து செய்த பெண் – மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட பெண் !

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (08:39 IST)
பஞ்சாப்பில் தனது மகளின் கணவரின் அண்ணன் மீது காதல் கொண்ட பெண், அவரை திருமணம் செய்து கொள்ள தனது கணவரை விவாகரத்து செய்துகொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் வசித்து வருகிறது அந்த குடும்பம். அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் ஆண் ஒருவரைக் காதலித்ததை அடுத்து அவர்கள் காதலுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தின் போது மணப்பெண்ணின் அம்மாவுக்கும் மாப்பிள்ளையின் அண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. தனது புதிய காதலரை கொண்ட காதலுக்காக தனது கணவனை விவாகரத்து செய்துள்ளார் அந்த பெண். இதையடுத்து நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்ததும் தனது காதலரோடு திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் அவர்களின் இந்த திருமணத்தை ஏற்காகததால் போலிஸ் ஸ்டேஷனில் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்