மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, புதிய ரூபாய் நோட்டுகளை பெற, நாடு முழுவதும் பொதுமக்கள் வங்கி வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், அவ்வாறு வட மாநிலம் ஒன்றில் ஏராளமானோர், ஒரு வங்கியின் முன்பு வரிசையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு பாஜக கட்சியை சேர்ந்த சிலர் தண்ணீர் கொடுத்தனர்.
ஆனால், சில பெண்கள் அவர்கள் கொடுத்த தண்ணீரை குடிக்க மறுத்துவிட்டனர். எங்களை இவ்வளவு சிரமத்திற்கு ஆளாக்கியது நீங்கள்தான். எனவே உங்கள் உதவி தேவையில்லை என அவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.