மோடி தொகுதியில் தேர்தல் தள்ளிவைப்பு ? – வேட்புமனுக்கள் தள்ளுபடி எதிரொலி !

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (12:21 IST)
பிரதமர் மோடிப் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்த விவசாயிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

பிரதமர் மோடியை எதிர்த்து அய்யாக்கண்ணு தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அய்யாக்கண்ணு திடீரென பல்டி அடித்து அமித்ஷாவை சந்தித்து பாஜக ஆதரவு கொடுத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மோடியின் தொகுதியில் 25 விவசாயிகள் உள்பட மொத்தம் 119 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த தொகுதியில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டபோது அதில் 89 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அதில் 24 விவசாயிகளின் வேட்புமனுக்களும் அடங்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவத்தை அடுத்து வாரனாசி தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது சம்மந்தமாக விவசாயிகள் சார்பாக தெய்வசிகாமணி இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்