5 மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், அசாமில் மூன்று கட்டமாக நடத்தவும், மேற்குவங்கத்தில் 8 கட்டமாக நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, மேற்கு வங்காளத்தில் மோடியும் அமித் ஷாவும் விரிவாக பரப்புரை மேற்கொள்ள வசதியாகவே இவ்வாறு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.