டார்ச்சர் செய்த மனைவியிடம் ஜீவனாம்சம் பெற்ற கணவன் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திங்கள், 17 அக்டோபர் 2016 (16:27 IST)
கணவனை வீட்டு வேலை செய்ததோடு மட்டுமில்லாமல், அவரை அடித்து துன்புறுத்தி வெளியே அனுப்பிய மனைவி, ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஒரு விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள சதாரா என்ற பகுதியில் வசிப்பவர் அனில். இவரின் மனைவி சரிதா. இவர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
 
இதில் சரிதா நன்றாக படித்தவர் என்று தெரிகிறது. அவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். ஆனால், அனில் அவ்வளவாக படிக்காதவர் என்று தெரிகிறது. இதனால், திருமணம் ஆன நாள்  முதல் சுனில் வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
 
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, அனிலை வீட்டை சரிதா விட்டு அனுப்பி விட்டார். இதன் பின் அனில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். மேலும், அவரின் மனுவில் “எனது மனைவி சரிதா, என்னை அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார். பல முறை என்னை தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் என்னை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி விட்டார். எனவே, எந்த வருமானமும் இல்லாத எனக்கு, அவர் உதவித் தொகை வழங்க வேண்டும்” என்று நீதிமன்றத்தில் சோலாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அனிலின் குற்றச்சாட்டை சரிகா மறுத்தார். ஆனால், இறுதியில் அனிலின் பக்கமே தீர்ப்பு வெளியானது. அவருக்கு, சரியாக மாதம் ரூ.2 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பொதுவாக விவாகரத்து வழக்குகளில் கணவனிடம், ஜீவனாம்சம் பெற மனைவி போராடுவார். ஆனால், வரலாற்றில் முதல் முறையாக, மனைவியிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுள்ளார் ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்