தனிக்குடித்தனம் வரமறுத்த கணவன்; மனைவி செய்த வெறிச் செயல்
வியாழன், 30 மார்ச் 2017 (18:32 IST)
ஆந்திரா மாநிலத்தில் கணவன் தனிக்குடித்தனம் வர மறுத்ததால், மனைவி பெற்ற குழந்தையை கொலை செய்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த யோகமூர்த்திநாயுடு என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவியும், 6 வயதில் மகளும் உள்ளனர்.
குமாரி தன் கணவரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் யோகமூர்த்திநாயுடு இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் யோகமூர்த்திநாயுடு பணியில் இருந்து சொந்த ஊருக்கு இரண்டு மாத விடுப்பில் வந்திருக்கிறார்.
இதையடுத்து மீண்டும் கூமாரி தனிக்குடித்தனம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் யோகமூர்த்திநாயுடு மறுத்துவிட்டார். இதனால் ஆவேசமடைந்த குமாரி தனது குழந்தையை கழுத்தை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
குமாரி கிணற்றில் குதித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரியை காப்பாற்றியுள்ளனர். பின் யோகமூர்த்திநாயுடு காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் குமாரி கைது செய்யப்பட்டார்.