ஆபூர்வ வெள்ளை நாகம் – பொதுமக்கள் ஆச்சர்யம்

புதன், 29 மே 2019 (09:08 IST)
பெங்களூருவில் மக்கள் வாழும் பகுதியில் காணகிடைக்காத அபூர்வ வெள்ளை நாகம் ஒன்று வலம் வந்து கொண்டிருந்திருக்கிறது. சுமார் 6 அடி நீளம் உள்ள அந்த பாம்பை பார்த்த மக்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபர் ஒருவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வெள்ளை நாகத்தை பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிட்டார். அபூர்வமான வெள்ளை நாகத்தை பார்த்த மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். மிகவும் சொற்ப அளவிலேயே இருக்கும் இந்த நாக பாம்புகள் அடர்ந்த காடுகளுக்குள் வாழ்பவை. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் அவ்வளவு எளிதில் வராது என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்