சபரிமலை மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் தங்குவதற்கு தடையில்லை! – தேவசம்போர்டு அறிவிப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 12 ஜனவரி 2024 (10:42 IST)
ஜனவரி 15 அன்று நடைபெறும் மகரஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்கள் சபரிமலையில் தங்க தடையில்லை என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.



ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதம் தொடங்கும் மண்டல பூஜை அதையொட்டிய மகரஜோதி தரிசனத்திற்காக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இருமுடிக் கட்டி மலைக்கு வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த முறை கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வந்தபடியால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி முதலாக சபரிமலையில் நேரடி தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க ஜனவரி 15 வரை நேரடி தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: ஏற்ற இறக்கத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

ஆன்லைன் முன்பதிவிலும் 16ம் தேதி 50 ஆயிரம் பேர், 17 முதல் 20ம் தேதி வரை தினசரி 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15ம் தேதிக்கு பிறகு 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை உடனடி சாமி தரிசன முன்பதிவுகளுக்கு நிலக்கல், பம்பை மற்றும் வண்டிபெரியாறு ஆகிய இடங்களில் முன்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகரஜோதி தரிசனத்தை காண வரும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை கோவில் மற்றும் கோவில் வளாகங்களில் தங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்