மிக்ஜாம் புயல் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள் என தெரிவித்தனர். இது நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எனவும் அதை தமிழக அரசு பார்த்துக் கொள்ளும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.