சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் சிக்கினார். அவர் சென்ற கார் சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதில் கார் ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமி மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி தொடர்ந்து 8-வது நாளாக இன்று நீடித்து வருகிறது.