கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சல்.. வட அமெரிக்காவில் இருந்து பரவியதா?

Mahendran

செவ்வாய், 7 மே 2024 (13:45 IST)
வட அமெரிக்க நாடுகளில் கடந்த சில மாதங்களாக வெஸ்ட் நைல் என்ற காய்ச்சல் பரவி வரும் நிலையில் தற்போது கேரளாவிலும் இந்த காய்ச்சல் ஐந்து பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் காய்ச்சல் வகைகளில் ஒன்று வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் என்பதும் வட அமெரிக்கா நாடுகளில் அதிகமாக காணப்படும் இந்த காய்ச்சல் காரணமாக குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த காய்ச்சல் தற்போது கேரளாவில் ஐந்து பேருக்கு பரவியிருப்பதாகவும் இருப்பினும் அவர்கள் தகுந்த சிகிச்சையின் மூலம் குணமாகி வருவதாகவும் அவர்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக வேறு யாருக்கும் இந்த காய்ச்சல் வரவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெஸ்ட் நாய்க்கு காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களுடைய ரத்த மாதிரி புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தான நரம்பியல் நோயை ஏற்படுத்தலாம் என்றும் எனவே பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1937 ஆம் ஆண்டு உகாண்டாவில் கண்டறியப்பட்ட இந்த காய்ச்சல் கேரளாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது என்பதும் 2019 ஆம் ஆண்டு ஒரு சிறுவன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்