மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

Mahendran

சனி, 22 மார்ச் 2025 (14:00 IST)
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் செய்ய இருந்த நிலையில், அந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மம்தா பானர்ஜி மற்றும் அவரது குழுவினர் இன்று காலை 9.10 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு, துபாய் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர். அதன் பின்னர், இன்று இரவு 8 மணிக்கு லண்டன் செல்லும் திட்டம் இருந்தது.
 
ஆனால், நேற்று பிற்பகல் கொல்கத்தா நகரின் மேற்கு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல்வரின் இங்கிலாந்து பயணம் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என செய்திகள் கூறின. இந்த நிலையில், தற்போது தீ விபத்து கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இன்று மாலை இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இன்று மாலை கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு மார்ச் 24ஆம் தேதி லண்டன் செல்லும் மம்தா பானர்ஜி, இந்திய தூதரகத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு, மார்ச் 25ஆம் தேதி வணிகர்களை சந்திக்க உள்ளார். 26ஆம் தேதி வணிக கூட்டத்தில் கலந்து கொள்வதுடன், 27ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். 28ஆம் தேதி லண்டனில் இருந்து கொல்கத்தாவுக்கு திரும்புவார்கள்.
 
கடந்த 2015ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி இங்கிலாந்து சென்ற நிலையில், தற்போது மீண்டும் செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்