சில்வர் லேக் - ஜியோ கூட்டணி எதற்கு? அம்பானி பதில் இதுதான்...

திங்கள், 4 மே 2020 (16:08 IST)
சில்வர் லேக்கை மதிப்புமிக்க பங்களிப்பாளராக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என முகேஷ் அம்பானி பெருமிதம். 

 
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு ( 43,574 கோடி ரூபாய்) பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.  
 
இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் எனும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. ஆம் இந்நிறுவனம் ஒரு சதவிகித பங்குகளை ரூ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து ரிலையனஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளதாவது, அனைத்து இந்தியர்களின் நலனுக்காக இந்திய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்ப்பதற்கும் மாற்றுவதற்கும் சில்வர் லேக்கை மதிப்புமிக்க பங்களிப்பாளராக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
 
தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றில் சில்வர் லேக் மிகவும் மதிக்கப்படும் குரல்களில் ஒன்றாகும். இந்தியன் டிஜிட்டல் சமூகத்தின் மாற்றத்திற்காக அவர்களின் உலகளாவிய தொழில்நுட்ப உறவுகளின் நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்