காகிதப் பயன்பாட்டை படிப்படியாக குறைப்போம் - சபா நாயகர்

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (17:03 IST)
லோக் சபாவை காகிதப் பயன்பாடு இல்லாத அமைப்பாக உருவாக்குவோம் . இதன்மூலம் காகித்தத்தின் பயன்பாடு குறைவதுடன் கோடிக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும். இதனால் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நம் சுற்றுச்சூழலையும் பாதுக்காக்கலாம் என்று தெரிவித்தார்.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக  எம்பிக்கள் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றனர். இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் 2019 ஆம் ஆண்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மீதான் விவாதம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அண்மையில் முத்தலாக் தடைச்சட்டம் லோக்சபாவில் பாஜகவின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
 
இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இந்தப் பாராளுமன்றக்கூட்டத்தொடர் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பாராளுமன்றக்  கூட்டத்தொடரில் பேசிய லோக்சபா சபாநாயகர் கூறியதாவது : இந்த லோக்சபாவை  காகிதப் பயன்பாடு இல்லாத அமைப்பாக உருவாக்குவோம் . இதன்மூலம் காகித்தத்தின் பயன்பாடு குறைவதுடன் கோடிக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும்.
 
மேலும்  இதனால் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நம் சுற்றுச்சூழலையும் பாதுக்காக்கலாம் என்று தெரிவித்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்