பிரதமர் மோடியே! வளையல் அணிந்து கொள்ளுங்கள்: நடிகை நக்மா

Webdunia
வியாழன், 4 மே 2017 (22:52 IST)
சமீபத்தில் முன்னாள் விளையாட்டு வீரர் அஜீத் வர்மா என்பவர் அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ரூ.1000க்க்கான செக் அனுப்பி அந்த பணத்தில் வளையல் வாங்கி மோடிக்கு அணிவிக்கவும் என்று கூறிய பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் பிரபல நடிகையும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுசெயலாளருமான நக்மா, பாகிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடிக்கு வளையல்கள் அனுப்பப்படும் என்று கூறி பரபரப்பை அதிகரித்துள்ளார்



 


கடந்த சில நாட்களாகவே பாஜகவுக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வரும் நக்மா இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'பாகிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடிக்கு வளையல்கள் அனுப்பப்படும் என்றும், பாகிஸ்தான் அத்துமீறலுக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ராணுவத்திற்கு நிதி அதகரிக்கப்பட்டும் பயன் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் பெண்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற பாஜகவினரின் கருத்துகளுக்கு நக்மா தனது கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்