வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: ஒருவருடம் கால அவகாசம் நீட்டிப்பு..!

வியாழன், 6 ஏப்ரல் 2023 (16:53 IST)
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு ஒரு வருடம் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இது கட்டாயம் அல்ல என்றும் விரும்புபவர்கள் இணைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசம் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் தெரிவித்துள்ளார். 
 
மேலும் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்