ராகுல் காந்தியை விமர்சித்து வீடியோ வெளியீடு.! ஜேபி நட்டா மீது பாய்ந்தது வழக்குப்பதிவு..!!

Senthil Velan

திங்கள், 6 மே 2024 (16:40 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை விமர்சித்து வீடியோ வெளியிட்டதாக கூறி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட மூன்று பேர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் கர்நாடக பாஜக எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தது.

அந்த வீடியோவில் ராகுல் காந்தி, சித்தராமையா ஆகியோர் இஸ்லாமியர்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது போலவும், அவர்கள் வளர்ந்து வந்து மற்றவர்களின் இட ஒதுக்கீட்டை பறிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, பாஜக மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது.

ALSO READ: ராகுல் காந்திக்கு நாடு முழுவதும் உள்ள துணைவேந்தர்கள் கண்டனம்..! எதற்காக தெரியுமா.?
 
அந்த புகாரின் அடிப்படையில்  பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பிரமுகர் அமித் மாளவியா ஆகியோர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்