ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டவர்.. வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் புகார்..!

Mahendran

திங்கள், 6 மே 2024 (14:35 IST)
ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் என்றும் அதனால் ரேபேலி தொகுதியில் போட்டியிடும் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ரேபேலி தொகுதியில் போட்டியிட சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது வேட்புமனுவை எதிர்த்து அனிருத் பிரதாப் சிங் என்பவர் புகார் மனுவை அளித்துள்ளார் 
 
அதில் ராகுல் காந்தி இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் என்றும் அவரது  தண்டனை இடைக்காலமாக தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் எனவே அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியே இழந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும்  ராகுல் காந்தி  பிரிட்டிஷ் குடிமகன் என்றும்,  பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பவர் சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் எனவே ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். ஆனால் தனது மனுவை நிராகரித்துவிட்டு ராகுல் காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்