துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கையா நாயுடு!!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (15:26 IST)
நாட்டின் 13 வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


 
 
முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
 
துணை ஜனாதிபதி தேர்தலில் கோபால கிருஷ்ண காந்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் வெங்கையா நாயுடுவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அடுத்த கட்டுரையில்