பெங்களூரில் இனி நுழையவே வரி.. இதே பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (11:27 IST)
பெங்களூரில் இனி வாகனங்கள் நுழைந்தாலே வரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து ஊடகங்களோ எதிர்க்கட்சி தலைவர்களோ எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். 
 
பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பீக் நேரங்களில் வாகனங்கள் நுழைய வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் பெங்களூர் நகருக்குள் நுழையும் தேவையில்லாத வாகனங்கள் தவிர்க்கப்படும் என்றும் இதனால் வாகன நெருக்கடி சீர் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
பீக் ஹவர்களில் பெங்களூரு  நகர் வழியே வாகனங்கள் சென்றால் வரி கட்ட வேண்டும் என்பதற்காக வாகனங்கள் சுற்றி செல்லும் என்றும் இதனால் தேவையில்லாத வாகனங்கள் வருவது தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அமைதி காத்து வருகின்றனர் என்றும் இதே பாஜக மாநிலங்களில் நடந்திருந்தால் பயங்கர கண்டனத்தை தெரிவித்து இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்