இந்நிலையில் கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய உத்தரகாண்ட் அரசு 9 நிறுவனங்கள் மற்றும் 22 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளித்தது. ஆண்டிஜென் பரிசோதனைக்கு ரூ.350, ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.100 என்ற கணக்கில் தனியார் நிறுவனங்களுக்கு தொகை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் அளித்த கொரோனா சோதனை முடிவுகளில் ஒரு லட்சம் சோதனைகள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல சோதனைகளுக்கு ஒரே மொபைல் எண், முகவரிகள் வழங்கப்பட்டுள்ளதும், ஆண்டிஜென் சோதனைகள் வெவ்வேறு எண்களுக்கு பதிலாக ஒரே எண்ணில் பல சோதனைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.