60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த நிலையில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சிக்கு மட்டும் 32 தொகுதிகள் கிடைத்தது என்பது இதனை அடுத்த தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டசபையில், ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சிக்கு ஒரே ஒரு எம்எல்ஏ மட்டும் இருக்கும் நிலையில், அந்த எம்எல்ஏ தனது ஆதரவை வாபஸ் பெற்று விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாஜக கட்சிக்கு தனிப்பெரும் மெஜாரிட்டி இருப்பதால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் மொத்தம் 60 தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில், அதில் 31 எம்எல்ஏக்கள் வைத்திருந்தாலே தனிப்பெரும் ஆட்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜகவிடம் 32 எம்எல்ஏக்கள் இருப்பதால், அக்கட்சி ஐந்து வருடம் முழுமையாக ஆட்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.