கிணற்றில் விழுந்த கன்று குட்டி; மீட்க முயன்ற 5 பேருக்கு நேர்ந்த சோகம்!

புதன், 9 செப்டம்பர் 2020 (11:36 IST)
உத்தர பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த கன்று குட்டியை காப்பாற்ற முயன்ற 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் கன்று குட்டி ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த வழியாக சென்ற விஷ்ணு என்பவர் கன்றுகுட்டியின் சத்தம் கேட்டு காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் கிணற்றில் விஷவாயு இருந்ததால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட அவர் கூச்சலிட்டுள்ளார்.

அவரது சத்தத்தை கேட்டு அடுத்தடுத்து நான்கு பேர் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதிக்க விஷ்ணு உள்ளிட்ட 5 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக விரைந்து ஐந்து பேரின் உடல்களையும் மீட்டதுடன், கன்றுகுட்டியையும் உயிருடன் மீட்டுள்ளனர்.

ஒரு கன்று குட்டியை காப்பாற்றுவதற்காக 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்