கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்து சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். எனினும் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி பிரதீப் என்பவர் அந்த பெண்ணிடம் கொரோனா குறித்து விசாரிப்பது போல அடிக்கடி போன் மூலமாக பேசி வந்துள்ளார்.
அந்த பெண்ணின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்த நிலையில் தனது வீட்டிற்கு வந்து கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பிரதீப் கூறியுள்ளார். இதற்காக பிரதீப் வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணை கட்டிப்போட்டு வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.