உத்தர பிரதேசத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர், தன்னை சுட வேண்டாம் என போர்டு மாட்டி வந்த சரணடைந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பட்டன் மாவட்டத்தை சேந்தவர் ஃபர்கான். பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ஃபர்கானை போலீஸார் நீண்ட காலமாக தேடி வந்தனர். சமீபத்தில் வியாபாரி ஒருவரிடமிருந்து 5 லட்ச ரூபாயை கொள்ளையடித்த வழக்கிலும் ஃபர்கான் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் ஃபர்கான் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் என போலீஸார் அறிவித்தனர். வெகுமதி அறிவித்து போலீஸ் தன்னை தேடி வருவதால் போலீஸ் தன்னை கொல்லக்கூடும் என அஞ்சிய ஃபர்கான் தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதற்காக காவல் நிலையம் சென்ற அவர் கழுத்தில் போர்டு ஒன்றை மாட்டியுள்ளார். அதில் “என்னை சுட்டுவிடாதீர்கள். போலீஸ் மீதான பயம் காரணமாக சரணடைகிறேன்” என அவர் எழுதியுள்ளார். ஃபர்கானை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.