ராமர் பிறந்த இடம் இந்தியாவில் உள்ள அயோத்தி என்றும், இந்திய இந்துக்களின் புனிதமான கடவுள் ராமர் என்றும் பல ஆண்டுகளாக நம்பிக்கையில் இருந்து வரும் நிலையில் திடீரென உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது என்றும் ராமர் இந்திய கடவுள் அல்ல என்றும், அவர் ஒரு நேபாளி என்றும், நேபாள பிரதமர் சர்மா ஒலி நேற்று தெரிவித்து இருந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது
இந்த நிலையில் ராமர் குறித்த நேபாள பிரதமர் சர்மா ஒலியின் கருத்துக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக அயோத்தியில் உள்ள இந்து மத குருக்கள் நேபாள பிரதமரின் கருத்தை கடுமையாம விமர்சனம் செய்து வருகின்றனர். கடவுள் ராமர் சராயு ஆற்றுக்கு கிழக்கே பிறந்தார் என்று வரலாற்று சான்றுகள் இருப்பதாகவும், நேபாளத்தில் எங்கே சராயு ஆறு உள்ளது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சீதை நேபாளத்தை சேர்ந்தவர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்து இல்லை என்றும் ஆனால் ராமரை நேபாளி என்று கூறுவது தவறு என்றும் கூறிய இந்துமத குருக்கள், நேபாள பிரதமர் ஒலி ஒரு பைத்தியக்காரர் என்றும் உலகிற்கே சொந்தமான ராமர் குறித்து தவறான தகவல் பரப்பும் நேபாள பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்