யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் 3 இடத்தைப் பிடித்த பெண்கள்

திங்கள், 30 மே 2022 (17:27 IST)
இந்திய அளவில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.இதில், 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் யு.பி.எஸ்.சியில் எழுத்துத் தேர்வும், ஏப்ரலில் நேர்முகத்தேர்வும் நடந்து முடிந்த நிலையில், இன்று முடிவுகளை இன்று வெளியிடப்பட்டது.

இதில், இந்திய அளவில் முதல் 3 இடங்களையும் பெண்கள் பிடித்துள்ளனர்.  முதல் இடத்தை சுருதி சர்மாவும், 2 வது இடத்தை சனங்கிதா அகர்வால் என்பவரும், 3 வது இடத்தை காமினி சிங்லாவும் பிடித்துள்ளனர்.

தமிழக அளவில் கோவை மாணவி ஸ்வாதி முதல் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்