கழிவறை என்று தெரியாமல் பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (09:06 IST)
உத்தரபிரதேச மாநில மக்கள் புதியதாக கட்டப்பட்டிருந்த ஒரு கட்டிடத்திற்கு காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் அதனை கோவில் என நினைத்து மக்கள் பூஜை செய்து வந்தனர். அதன்பின்னரே அந்த கட்டிடம் ஒரு பொதுக்கழிப்பிட கட்டிடம் என்பது தெரிய வந்தது.
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ்தஹா என்ற பகுதியில் பொதுக்கழிப்பிடம் ஒன்று அரசு சார்பில் கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களாக உபியில் அரசு சார்பில் எந்த கட்டிடம் கட்டினாலும் காவி பெயிண்ட் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில் இந்த அரசு பொதுக்கழிப்பிடத்திற்கும் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டது
 
இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காவி நிறம் பூசப்பட்ட இந்த கட்டிடத்தை கோவில் என நினைத்த கும்பிட்டு சென்றனர். ஒருசிலர் இந்த கட்டிடத்தின் படியில் பூ, பழம் வைத்து பூஜை செய்து வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் இந்த கட்டிடம் கோவில் இல்லை, கழிப்பறை என்று கூறிய பின்னர் தான் பொதுமக்களுக்கு உண்மை தெரிந்ததே. அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது
 
இதுகுறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களோடு வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்