டி.எஸ்.பியை கான்ஸ்டபிளாக பதவியிறக்கம் செய்த உபி முதல்வர்: என்ன காரணம்?
புதன், 2 நவம்பர் 2022 (17:44 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் டிஎஸ்பியை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவர் காவல்துறையில் பலாத்கார புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன்னை காவல் ஆய்வாளர் ஒருவர் கும்பலுடன் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்
இந்த வழக்கை அப்போது டிஎஸ்பி ஆக இருந்த கிஷோர் என்பவர் விசாரணை செய்த நிலையில் அவர் அந்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதுமட்டுமின்றி குற்றவாளிகளிடம் இருந்து இலஞ்சம் பெற்றதாகவும் கூறப்பட்டது
இதனை அடுத்து டிஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் ஐந்து லட்ச ரூபாய் குற்றவாளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி வைரல் ஆனது
இதனை அடுத்து டிஎஸ்பி கிஷோரை கான்ஸ்டபிள் ஆக பதவி இறக்கம் செய்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை இந்திய வரலாற்றில் டிஎஸ்பி ஒருவர் கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்யப்பட்ட இல்லை என்று கூறப்படுகிறது