சாகிறதுக்கு என்றே போராட்டம் செய்கின்றனர். உபி முதல்வரின் சர்ச்சை கருத்து!

புதன், 19 பிப்ரவரி 2020 (20:04 IST)
சிஐஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் செய்தால் சாவு நிச்சயம் என்று தெரிந்தும் போராட்டம் செய்பவர்கள் உயிருடனா இருக்க முடியும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடிய 22 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டமன்றத்தில் பதில் அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் ’சிஐஏ எதிர்ப்புப் போராட்டங்களின் போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு யாரும் பலியாகவில்லை. அதே நேரத்தில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் நடத்துபவர்கள் சாகவேண்டும் என்றே போராடி வருகிறார்கள். அவ்வாறு வரும்போது உயிருடனா? இருக்க முடியும்
 
மேலும் அப்பாவி பொதுமக்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் போராட்டம் செய்து வருவதால் தான் இவ்விதமான விபரீதங்கள் ஏற்படுகிறது. மேலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்