’’கொரோனா காரணமாக பொருளாதாரம் சரிந்துள்ளதால், மத்திய அரசு நிதி பற்றாக்குறையை சரிசெய்ய கடன் வாங்க வேண்டும். இந்த சூழலில் அதிக வரி விதிக்கக் கூடாது.பொருளாதாரம் உச்சத்தில் இருந்தால்தால் வரி விதிக்கலாம். ஆனால் ஊரடங்கின்போது `வரி விதிப்பது மக்களை ஏழ்மையில் தள்ளிவிடும். எனவே நாட்டு மக்களுக்கு பணத்தை நேரடியாக வழங்க வேண்டுமென தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் மத்திய அரசு வழங்குவதற்குப் பதிலாக மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது ’’என தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.