கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கின்ற்னர். ஒரு சிலர் சில நூறு கிலோமீட்டர்களும், ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களும் நடந்து செல்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
தாங்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல வாகன ஏற்பாடு செய்து தரும் படி அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ராகுல் காந்தியுடன் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அந்த தொழிலாளர்களுக்கு உணவு குடிதண்ணீர் உள்பட அனைத்து வசதிகளையும் கொடுத்து அவர்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கும்படி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்