மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானிக்கு கொரொனா தொற்று உறுதி

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (19:58 IST)
உலக அளவில் கொரொனா தொற்றுப் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவும் இறப்பு விகிதம் சற்றுக் குறைந்துவருவதாகவும்  தகவல்கள் வெளியாகிறது.

இருப்பினும் கொரோனா வைரஸ் எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லோரையும் பாதித்து வருகிறது. பாஜக தலைவர் அமித்ஷா, மறைந்த எஸ்.பி.பாடகர், அமைச்சர் செல்லூர் ராஜூ, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா அமைச்சர் ராமதாஸ் அத்வால் உள்ளிட்ட பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னுடன் இருந்தவர்களும் பரிசோதனை செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்