மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!

சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:25 IST)
கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா உலகத்தையே முடக்கியுள்ள நிலையில் இதுவரை இரண்டு அலைகள் பரவி பல லட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது. 20 கோடி பேர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் தடுப்பூசிகளை போட்டு வருகின்றன.

இந்தியாவில் இப்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு ஊசிகளும் போடப்பட்டு வரும் நிலையில் குஜராத்தைச் சேர்ந்த ஸைடஸ் நிறுவனம் மத்திய அரசுடன் இணைந்து தயாரித்துள்ள ஸைகோவிட் என்ற தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடலாம் என்பது இதன் சிறப்பு.  மொத்தம் 3 டோஸ்களைக் கொண்டது இந்த தடுப்பூசி. ஆண்டுக்கு 10 கோடி முதல் 12 கோடி வரையிலான எண்ணிக்கையில் இதை தயாரிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்