ஏழை நாடு என்று கூறிய ஸ்னாப்சாட்-ஐ அடித்து விரட்டிய இந்தியர்கள்

திங்கள், 17 ஏப்ரல் 2017 (04:45 IST)
உலகில் பெரும்பாலான பயனாளிகளை கொண்ட ஸ்னாப்சாட் சமூக வலைத்தளம் இந்தியாவிலும் பிரபலமாக இருந்தது. இதற்கு இந்தியாவில் மட்டும் சுமார் 40 லட்சம் பயனாளிகள் இருந்தனர்.



 


இந்த நிலையில் ஸ்னாப்சாட்டின் சி.இ.ஓ இவன் ஸ்பிகல் என்பவர், 'இந்தியா ஒரு ஏழை நாடு. அந்நாட்டில் வர்த்தகத்தை விரிவு செய்யும் எண்ணம் இல்லை' என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார்.

ஸ்பிகல் இந்த கருத்தை கூறிய அடுத்த நிமிடம் முதல் நாட்டுப்பற்றுள்ள இந்தியர்கள் பதிலடி கொடுக்க தொடங்கினர். ஸ்னாப்சாட் செயலியை தங்கள் மொபைலில் இருந்து அன் இன்ஸ்டால் செய்து வந்ததால் அதன் ரேட்டிங் மளமளவென இறங்கின

டுவிட்டரில் #UninstallSnapchat #boycottsnapchat ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டுக்கு வந்தன. தொடர்ச்சியாக இந்திய பயனாளிகள் வெளியேறி வந்ததால் ஆப் ஸ்டோர் தகவலின் படி ஸ்நாப்சாட் நிறுவனத்தின் ரேட்டிங் 4 ஸ்டாரில் இருந்து ஒரு ஸ்டாருக்கு சரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்னாப்சேட் நிறுவனம், இந்த கருத்து ஸ்பிகலின் சொந்த கருத்து என்றும், ஸ்னாப்சேட்டின் கருத்து இல்லை என்றும் மறுத்தது. இருப்பினும் இந்தியர்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக இந்த செயலியை வெறுக்க தொடங்கிவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்