ஸ்மார்ட்போனில் இருந்து இந்த ஆப்-களை உடனே நீக்குங்கள்: மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (19:21 IST)
உளவுத்துறை அறிக்கைகளை தொடர்ந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உளவுத்துறை அறிக்கைகளை தொடர்ந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் மால்வேர் நிறைந்த செயலிகளை, பிளே ஸ்டோர்களில் வெளியிட்டிருப்பதாகவும், அதைக்கொண்டு பயன்களின் தகவல்களை திருட வாய்ப்புள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Top Gun, Mpjunkie, Bdjunkie மற்றும் Talking Frog ஆகிய செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் கூகுள் நிறுவனம் SmeshApp எனும் செயலியை தடை செய்துள்ளது. இதனால் இந்திய ராணுவ வீரர்களும் இது போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 
அடுத்த கட்டுரையில்