பாஜகவுக்கு தனியான ரூ.500 நோட்டு அச்சடிப்பு? காங்கிரஸ் திடுக்கிடும் புகார்

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:02 IST)
பாஜக கட்சிக்கு தனியாக ரூ.500 நோட்டு அச்சடிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளனர். 


 

 
ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. கபில் சிபில், ரூ.500 நோட்டுகள் இரண்டு விதமாக அச்சடிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். பாஜக கட்சிக்கு தனியாக ரூ.500 நோட்டுகள் மத்திய அரசுக்கு தனியாக ரூ.500 நோட்டுகள் என இரண்டு விதமாக இருக்கிறது என்றார்.
 
கபில் சிபிலுடன் குலாம்நபி ஆசாத்தும் சேர்ந்து ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றார். இதனால் ரஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. 
 
ஆனால் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இதை முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்தார். 
அடுத்த கட்டுரையில்