2025ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 21 ஜனவரி 2024 (11:30 IST)
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முதல் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்.  
 
2024 -25 ஆம் கல்வி ஆண்டு முதல் ஒரு கல்வியாண்டில் இரண்டு பொது தேர்வுகள் நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர் முதல் பொது தேர்வை நன்கு எழுத முடியும் என்று ஒரு மாணவர் முடிவெடுத்தால் அவர் இரண்டாவது பொதுத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்கு பெறலாம் என்றும் இரண்டு தேர்வுகளும் கட்டாயம் எழுத வேண்டும் என்று மாணவர்களுக்கு கூறப்படாது என்றும் தெரிவித்தார். 
 
முதல் பொது தேர்வு 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் இரண்டாவது பொதுத் தேர்வு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும் என்றும் இரண்டு பொது தேர்வில் எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எதில் கிடைக்கிறதோ அதை இறுதி மதிப்பெண்களாக தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்