அபிநந்தனுக்கு வெல்கம் … மோடிக்கு கோபேக் … - இதுதான் தமிழ்நாடு !

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (12:25 IST)
பாகிஸ்தான் ராணுவத்தால் இன்று விடுதலையாகும் அபிநந்தனுக்கு வெல்கம் அளித்தும் கன்னியாகுமரிக்கு வருகைத்தரும் மோடிக்கு கோபேக் சொல்லியும் தமிழக மக்கள் சமூகவலைதளங்களில் டிரண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. இதற்குப் பாகிஸ்தான் பதிலடித் தாக்குதல் நடத்திய போது இந்திய விமானி அபிநந்தன் என்பவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு மக்களும் கோரிக்கை வைத்தனர். மத்திய அரசும் பல்வேறு உலக நாடுகளின் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் இன்று அபிநந்தனை இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகாப் பகுதியில் இந்தியாவிடம் ஒப்படைக்கிறது.

போர்க்கைதியாக சிக்கிய ஒருவர் 2 நாட்களுக்குள் சொந்த நாட்டிடம் ஒப்படைக்கப் படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை. அதையடுத்து நாடு முழுவதும் அபிநந்தனை வரவேற்கும் வெல்கம் அபிநந்தன் (welcome abinanthan) என்ற ஹேஷ்டேக் டிரண்ட் ஆகி வந்தது. அதுபோல இன்னொரு முக்கியமான விஷயமும் இப்போது டிரண்டிங்கில் இருந்து வருகிறது. இன்று திருவனந்தபுரம் வரும் மோடி அப்படியே கன்னியாகுமரியில் நடக்க இருக்கும் பாஜக வின் கட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழகமும் வர இருக்கிறார். சமீபகாலமாக மோடி எப்போது வந்தாலும் தமிழக மக்கள் கோபேக் மோடி ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட இருக்கும் அபிநந்தனை வரவேற்காமல் பிரதமர் மோடி அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது சரியல்ல என்று தமிழகம் வரும் மோடிக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து இன்று மீண்டும் கோபேக் மோடியை தமிழகம் டிரண்டிங்கில் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் பதில் தாக்குதல், விமானி பாகிஸ்தானிடம் சிக்கியது மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லையி நிலவும் பதற்றம் ஆகியவைப் பற்றி இந்தியப் பிரதமர் மோடி இதுவரை மக்களிடம் எதுவும் பேசாமல் இருப்பதும் நேற்று முழுவதும் கட்சி நிர்வாகிகளிடம் பூத் கமிட்டிக் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் மோடி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்