பிளாக் நரேந்திர மோடி; டுவிட்டரில் புரட்சி: பாஜகவினர் திகைப்பு!!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (12:31 IST)
சுமார் 33.7 மில்லியன் மக்கள் மோடியை டுவிட்டரில் பின் தொடர்ந்து வரும் நிலையில், #BlockNarendraModi என்ற ஹாஷ் டேக் மூலம் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


 
 
நாட்டில் உள்ள பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் வெளிநாட்டில் ஊர் சுற்றும் நரேந்திர மோடியை பிளாக் செய்யுங்கள் என்று டுவிட்டரில் புரட்சி வெடித்துள்ளது.
 
சமூக பிரச்னைகளை சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆக்குவது தற்போது அதிக அளவில் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது #BlockNarendraModi என்பது ட்ரண்ட் ஆகியுள்ளது.
 
மோடியை சுமார் 33.7 மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில், மோடியை பிளாக் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
 
டுவிட்டரில் வெடிக்கும் இந்த புரட்சி, மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்பதால் பாஜகவினர் திகைத்து போய்யுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்