கணவர் இறந்த செய்தியை நேரலையில் வாசித்த செய்தி வாசிப்பாளர்...

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (16:04 IST)
தன்னுடைய கணவர் சென்ற கார் விபத்தில் சிக்கியதை, ஒரு பெண் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கூறிய சம்பவம் நடந்துள்ளது.


 

 
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஐபிசி 24 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிபவர் சுப்ரீத் கவுர். இவர் கடந்த 1 வருடத்திற்கு முன் ஹர்ஷாத் கவடே என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ராய்ப்பூரில் ஒன்றாக வசித்து வந்தனர். 
 
இந்நிலையில், கடந்த 8ம் தேதி காலை செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அவசர செய்தியை ஒரு நிருபர் தொலைப்பேசியில் கூறியுள்ளார். அதாவது மகாசமுந்த மாவட்டம் பிதாரா பகுதிக்கு அருகில் ஒரு கார் விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். 
 
நண்பர்களுடன் அந்த காரில் சென்றது தன்னுடைய கணவன்தான் என்பதை புரிந்து கொண்ட சுப்ரீத், அந்த விபத்தில் சென்ற 5 பேரில் 3 பேர் பலியாகி விட்டதாக செய்தி வாசித்து விட்டு, அந்த அறையிலிருந்து வெளியே வந்து கதறி அழுதுள்ளார். 
 
இதுபற்றி அந்த தொலைக்காட்சி மூத்த ஆசிரியர் கருத்து தெரிவித்த போது “ கவுர் அந்த விபத்து செய்தியை வாசித்து விட்டு வெளியே வந்தவுடன், அவரது உறவினர்களிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வரத் தொடங்கியது. அவரின் கணவர் இறந்து விட்டார். ஆனால், அதை அவரிடம் சொல்லும் தைரியம் எங்களுக்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்