போலிஸ் ஸ்டேஷனுக்குள் திருநங்கைகள் கலாட்டா – போலிஸ் தடியடி !

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (10:23 IST)
உத்தர பிரதேசத்தில் திருநங்கைகள் குழு இரண்டிற்கு இடையில் ஏற்பட்ட தகராறால் போலிஸார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசம் மீரட்டில் கணிசமான அளவில் திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கடைகளுக்கு சென்று வியாபாரிகளை ஆசிர்வாதம் செய்து அவர்களிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைப் பெற்று தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர்.

இது மாதிரிக் கடைகளுக்கு சென்று பணம் பெறுவதில் இருக் குழுக்களுக்கு இடையே பிரச்சனை எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பாக இது சம்மந்தமாக அவர்களுக்கு இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் சாலையிலேயே இரண்டு குழுக்களும் சண்டையிட ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு சாலைகளில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அச்சமுற்ற பொதுமக்கள் போலிஸில் இதுபற்றிப் புகார் கொடுக்க இரு குழுக்களில் உள்ளவர்களையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர் போலிஸ்.

ஆனால் போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட நிலையிலும் அவர்கள் சண்டையிடுவதை நிறுத்தவில்லை. இதனால் போலிஸார் இருத் தரப்பையும் கட்டி வைத்து பிரம்பால் அடித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்