ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு கான்பூரில் விபத்து

புதன், 28 டிசம்பர் 2016 (10:49 IST)
அஜ்மீர் - சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரூரா பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.


 
 
அஜ்மீர் - சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் இன்று காலை தடம் புரண்டது. இந்த விபத்து 2 பேர் பலியாகியுள்ளனர், 40 பேர் காயம் அடைந்துள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தால் கான்பூர் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மீட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னதாக கடந்த மாதம் 21ம் தேதி இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்