நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (07:40 IST)
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழா மும்பை உள்பட நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறிய விநாயகர் முதல் பெரிய விநாயகர் வரை சாலைகளில் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கமும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடாத  நிலையில் இந்த ஆண்டு பொதுமக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் நேற்று இரவே விநாயகர் சிலை உள்பட பல பொருள்களை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விநாயகர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்